வழிபாட்டால் நிம்மதி காண வேண் டிய நாள், சொன்ன சொல்லைக் காப் பாற்ற துடிப்புடன் செயற்படுவீர்கள், சுப செலவுகள் அதிகரிக்கும், தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும்.
இடபம்
புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புண்டு, தெய்வ அனுகூலமுண்டு.
மிதுனம்
கோயில் வழிபாட்டில் குதூகலம் காண வேண்டிய நாள், வரு மானம் வரும் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
கடகம்
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சி னைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும்.
சிங்கம்
விரயங்கள் தவிர்க்க இயலாமல் ஏற்படும்,வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்ச்சி தேவை, காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள்.
கன்னி
பெண்களின் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும், நண்பர்கள் மூலம் உதவி கள் கிடைக்கும், பிரயாண அணுகூலம் உண்டு, புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
வியாபார விருத்திக்கு வித்திடுவீர் கள்,மறைமுக எதிர்ப்புகள் விலகும், எதிர் பார்த்த தொகை கைக்கு வந்து சேரும், பழைய கடன்கள் வசூலா கும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள் தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கும், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
தனுசு
உற்சாகமாகப் பணிபுரிவீர்கள், வாக னம் பற்றிய சிந்தனை உருவாகும், தொழில் வளர்ச் சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
மகரம்
நண்பர்கள் கலந்துரையாடல் ஆரோக் கியம் சீராகி ஆனந்தப்படும் நாள், சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடி யும் தெய்வ தரிசனம் உண்டு.
கும்பம்
விரதங்களில் நம்பிக்கை கூடும் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் புதிய பொருள் சேர்க்கையுண்டு மனையில் மங்கள ஓசை கேட்பத ற்கான அறிகுறி தோன்றும் பணவரவு திருப்தி தரும்.
மீனம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள் ஆரோக்கியம் சீராக மருத்துவத்தை நாட வேண்டிய நாள் திடீர் பயணத்தால் திசைதிருப்பம் ஏற் படலாம்.
இன்றைய நாள்
03.09.2010
(ஆவணி 18 வெள்ளிக்கிழமை)
தசமி பின்னிரவு 3.37 மணி வரை
மிருகசீரிடம் முற்பகல் 9.53 மணி வரை
இராகுகாலம் 10.35-12.05 மணிவரை
சுபநேரம் 6.05-7.35 மணிவரை
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
டெங்குக் காய்ச்சலின் அபாயம் எங்களை நோக்கி வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஏற் கனவே யாழ்ப்பாணத்தை ஒரு கலக்குக் கலக் கிய டெங்குக் காய்ச்சலுக்குப் பச்சிளம் பாலகர்களைப் பலிகொடுத்த துயரம் மறப்பதற்குரிய தல்ல.
டெங்கின் அபாயம் உணர்ந்து அனைவரும் விழிப்படைந்து கொண்டமையும் மழை வீழ்ச்சி முற்றுப் பெற்றமையும் டெங்கின் தாக்கத்தைக் குறைத்தது எனலாம்.டெங்கின் தாக்கம் குறைவடைந்ததும் நாங் களும் சோர்வடைந்தோம். சுற்றுப் புறச் சூழல், வீட்டுச் சூழல் தொடர்பில் செலுத்திய கவனத்தைக் குறைத்தோம்.
இதன் விளைவாக மீண்டும் டெங்குக் காய்ச்சல் தனது கோரத் தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. இந்த ஆரம்பத்திற்கு நட்டுவாங்கமாகவும், பக்கவாத்தியமாகவும் மழை காலம் இருப்பதால் டெங்கு நடத்தும் ஊழித் தாண்டவம் உக்கிரம் பெறும் என்பது உறுதி.
அந்தத் தாண்டவத்தில் யாருடைய பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றனவோ அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
எங்களை நோக்கி எருமை வாகனத்தில் வருகின்ற டெங்குவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தயாராக வேண்டும்.
டெங்கைப் பரப்பும் நுளம்பின் உற்பத்தியை, பெருக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்குத் திடசங்கற்பம் பூண்டால் வருகின்ற மழை காலம் விவசாயம் விளைந்து மனம் மகிழ்கின்ற கால மாக மாறும்.
இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் மனச்சாட்சிப்படி நடப்பதாகும். எனது காணி, எனது நிலம் என்று மார்தட்டி உரிமை கொண்டாடுவது மட்டுமல்ல; அந்த இடத்தைத் தூய்மையாகவும், துப்புரவாகவும் வைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.
வீதிகளில், வடிகால்களில், பொது இடங்க ளில் குப்பைகளைக் கொட்டுவது, கொள்கலன் களை, குடுவைகளை வீசுவது என்ற பொறுப் பற்ற செயல்கள் மனித உயிரைக்காவு கொள்ளக் காரணமாகி விடும். அது மிகப் பெரும் பாவம் என்று நினைக்க வேண்டும். அந்த நினைப்பில்தான் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி தரும்.
இதை விடுத்து நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் இருக்குமாயின், அது வே டெங்கின் உக்கிரத் தாண்டவத்திற்கு மேடை யாக இருக்கும்.
ஆகவே அன்பிற்குரிய மக்களே! வரப்போகும் டெங்கு அபாயத்தைத் தடுத்து நிறுத்தி எங்கள் பிள்ளைச் செல்வங்களைக் காப்பாற்ற வாருங் கள்.விரைந்து வாருங்கள். எழுந்து வாருங்கள்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்