Breaking News:
  • நல்லூரானுக்கு இன்று தேர்
  • அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்
  • அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
  • யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்!
  • இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள்  மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம் சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம் முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம் விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம் தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம் குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின்  ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம் எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம் குடும்பத்தில்  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்

07.09.2010

(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)

சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை

மகம் பின்னிரவு 3.23 மணிவரை

இராகுகாலம் 3.04-4.34 மணிவரை

சுபநேரம் 10.34-12.04 மணிவரை

காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

262

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டை ஐ.நா. சபையில் நிறைவேற்ற முடியாது - அரசாங்கம் கூறுகிறது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:21:28| யாழ்ப்பாணம்]

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியாதென அரசாங்கம் உறுதிபடத் தெரிவித் துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடு கள் சபையின் சட்ட விதிகளை மீறுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரி விக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்க விசேட குழுவொன்றை பான் கீ மூன் நியமித்துள்ளார். இந்த நிலையிலேயே இலங்கை அரசாங் கத்தின் சிரேஷ்ட அமைச்சர் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடொன்றின் உள் விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக ஐக்கிய நாடு கள் சபையை உருவாக்கியவர்கள் எதிர்பார் க்கவில்லை எனவும் இலங்கை அரசாங்கத் தின் சிரேஷ்ட அமைச்சர் கூறினார்.

இலங்கை சர்வதேச சட்டம் உள்நாட்டுச் சட்டம் ஆகியவற்றை மீறாத காரணத்தினால் எந்தவித ஆலோசனைக் குழுவையும் அமைக்கத் தேவையில்லை என பான் கீ மூனுடனான கடந்த 5ஆம் திகதி இடம் பெற்ற தொலை பேசி உரையாடலின் போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

நோர்வே , பிரிட்டன் போன்ற நாடுகளின் நீதிமன்றங்களில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்த தமிழீழத்தை ஆரம்பிக்கும் சில சக்திகள் செயற்படுகின்றன.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளை இராணுவம் சுட்டுக் கொன்றதாகப் பொன்சேகா கூறிய கூற்றுத்தான் இன்று இந்த மோசமான நிலைமைகளுக்குக் காரணமாகும். நாம் எந்தப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கத் தயாராகவுள்ளோம்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டைக் கொண்டு வரும்போது எமக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும் பான்மை வாக்குக் கிடைக்கும்.புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்படுகின் றன. நாணய நிதியத்துடன் இருந்து கடனைப் பெறுவதற்கும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்றார்.

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்