இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள் மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம்
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம்
முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்
07.09.2010
(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை
மகம் பின்னிரவு 3.23 மணிவரை
இராகுகாலம் 3.04-4.34 மணிவரை
சுபநேரம் 10.34-12.04 மணிவரை
காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
262
பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள புலிகள்! - இந்தியாவிடம் இலங்கை அரசு கவலை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:18:40| யாழ்ப்பாணம்]
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிர பாகரனை அவ் இயக்கத்தின் சில அமைப்புக் கள் தேடிவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் சில அமைப்புக் கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கருத்தை இவர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்பதே பலத்த சந்தேகங்களைக் கிளப்பி யுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் தலைவர் இறந்ததாகக் கூறும் இலங்கை அரசு சமீபத்தில் பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரத்தை இந்தியாவுக்கு கையளித்ததாகக் கூறியதும் அதை சிதம் பரம் ஒத்துக் கொண்டார்.
ஆனால் பின்னர் இந்திய உளவு நிறு வனம் தமக்கு இதுவரை மரண அத்தாட்சிப் பத்திரம் கிடைக்கவில்லை எனக் கூறியது. இந்த நிலையில் பிரபாகரனை சில அமைப்புக்கள் தேடிவருகின்றன என்று போகொல்லா கம கூறியுள்ளார்.இது இந்திய அரசையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்