ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம்
கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம்
பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம்
பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில் தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்
09.09.2010
(ஆவணி 24, வியாழக்கிழமை)
பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை
உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை
இராகுகாலம் 1.34-3.04 மணிவரை
சுபநேரம் 7.34-9.04 மணிவரை
நல்லைக் கந்தன் பூங்காவனம்.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
264
கிழக்கு முதலமைச்சருக்கு இந்திய அரசு அழைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:12:36| யாழ்ப்பாணம்]
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜ யம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந் திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நேற்று சிவனேசதுரை சந்திரகாந்தனைக் கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.
இதன்போதே இவ் அழைப்பை அவர் விடுத்ததாகக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இச் சந்திப்புத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதனையடுத்து அவரை நான் நேற்றுச் சந்தித்தேன். இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.
அத்துடன் அதிகாரப் பகிர்வு, 13-வது திருத்தச் சட்டம் அதனை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கினேன். கிழக்கு மாகாணத்தில் கல் வித் தரத்தை உயர் த்துவதற்கு இந் தியா உதவும் என நிருபமா ராவ் எனக்கு உறுதியளித்திருந்தார்.இலங்கை விட யத்தில் இந்தியா தொடர்ந்தும் கவ னம் செலுத்தி வரு வதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார் என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்