Breaking News:
  • நல்லூரானுக்கு இன்று தேர்
  • அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்
  • அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
  • யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்!
  • இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள்  மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம் சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம் முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம் விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம் தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம் குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின்  ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம் எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம் குடும்பத்தில்  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்

07.09.2010

(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)

சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை

மகம் பின்னிரவு 3.23 மணிவரை

இராகுகாலம் 3.04-4.34 மணிவரை

சுபநேரம் 10.34-12.04 மணிவரை

காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

262

பண்ணை வீதியை புனரமைக்க போதியளவு நிதி இல்லையாம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:11:54| யாழ்ப்பாணம்]

யாழ்-தீவகம் பிரதான பாதையான பண்ணை வீதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நிதியின்மையால் அதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - தீவகத்திற்கான பிரதான தரை வழிப்பாதையான பண்ணை வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின் றனர் என பல்வேறு தரப்பினராலும் நீண்ட கால மாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் யாழ் - பண்ணை வீதியின் முதல் ஒரு கிலோ மீற்றர் பகுதியை அகலமாக்கி புனரமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் கடந்த வருட இறுதியில் நிறைவடைந்தது. எனினும் புனரமைப்பு பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் தாமதப் படுத்துவதாக தகவல் வெளியாகின.

பண்ணை வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்குரிய ஒப்பந்தத் தொகையில் முற்பணத் தொகையை வழங்காமையி னாலேயே ஒப்பந்தக்காரர் பணிகளை ஆரம்பிக் காமல் தாமதப்படுத்துவதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ் வருடத்திற்குரிய வரவு செலவுத்திட் டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக் குரிய வருடாந்த மூலதனச் செலவு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்தக்காரர் கோரிய முற் பணத் தொகையை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்காமையினால் புனரமைப்பு பணி கள் ஆரம்பிக்கப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடமே பண்ணை வீதியை திருத்து வதற்கான நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளருடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கிடைக்கவில்லை.

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்