ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம்
கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம்
பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம்
பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில் தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்
09.09.2010
(ஆவணி 24, வியாழக்கிழமை)
பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை
உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை
இராகுகாலம் 1.34-3.04 மணிவரை
சுபநேரம் 7.34-9.04 மணிவரை
நல்லைக் கந்தன் பூங்காவனம்.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
264
நிருபமாவின் வருகை ஏன்? காலம் விரைவில் காட்டித்தரும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:10:06| யாழ்ப்பாணம்]
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமாயின் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இலங்கைக்கு இனப்பிரச்சினை நோயாயின் இந்தியாவே அதற்கு வைத்தியர் ஆவார்.
நோய் என்று வந்து விட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு பொருத்தமான மருத்துவர்கள் பலர் இருப்பார்கள். எனினும் அயலில் இருக்கின்ற மருத்துவர் கள் தனது எல்லைக்குள் ஏனைய மருத்துவர் கள் வருவதை விரும்பவில்லையாயின் நோயாளின் நிலைமை சிக்கலாகவே அமையும்.
இந்த நிலைமையே இலங்கையில் காணப்படுகின்றது. இனப்பிரச்சினை என்ற நோய்க்கு சிகிச்சை அளிக்கும் திறன் இந்தியாவிடம் இருக் கின்றபோதிலும் அதனை இந்தியா விருப்பத்துடன் செய்யவில்லை என்பது தெளிவு. இந்தியா விரும்பியிருந்தால் இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வென்பது மிகச் சாதாரண விடயமாகும்.
இருந்தும் இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதன் மூலம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்த முடியுமென அந்நாடு நினைத் திருக்கலாம்.
அந்த நினைப்பு இப்போது தவிடுபொடியாகி விட்டது. இந்தியாவின் எதிர்ப்பிற்குரிய சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் மிக ஆழமாக ஊடுருவியுள்ளன. இந்த ஊடுருவலை இந்தியா எதிர்பார்த்திருக்கவில்லை. இலங்கை அரசு தனது அதட்டலை மீறிச் சொல்லாது என்ற பிரமை, இந்தியாவை தோல் வியுறச் செய்துவிட்டது.
எதுவாயினும் இலங்கை இனப்பிரச்சினை யில் இந்தியத் தலையீடு தேவை என்பது ஈழத் தமிழ் மக்களின் முடிபு.
இந்த முடிபை பாரதம் பல தடவைகள் ஏமாற் றியுள்ளது.
இறுதியாக வன்னிப் போரில் நடந்த அத்தனை மனிதப் பேரவலத்தின் போதும் இந்தியா காப் பாற்றும் என நம்பி-நினைத்து உயிர்விட்ட இழப்பு, அந்த இழப்பை அனுபவித்த கொடுமை.
இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை அதன் பாவம் இந்தியாவை வாட்டவே செய்யும். இது தமிழகம் தந்த வள்ளுவனின் வாய்மொழிச் சான்றாகக் கொண்டு சொல்லப்படுகின்றது.
இந்த வார்த்தை தோற்குமாயின் இதை எழுதிய யாம் தோற்றதாக யாரும் கருதலாகாது. மாறாக தெய்வப் புலவன் வள்ளுவன் தோற் றான் என்றே தெளிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்தியாவின் நிருபமா அம்மை யார் இலங்கைக்கு வந்துள்ளார். அவரின் வார்த் தைகள் தேர்தல் பிரசாரம் போல அமைந்துள்ளது.
வெந்து-நொந்து போயுள்ள மக்களை தேர்தல் காலத்தில் தட்டியயழுப்பி விடவா அம்மையார் வந்தார். அல்லது நிரந்தரத் தீர்வைத் தரவா வந்தார் என்பதை காலம் விரைவில் காட்டித் தரும்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்