இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள் மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம்
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம்
முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்
07.09.2010
(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை
மகம் பின்னிரவு 3.23 மணிவரை
இராகுகாலம் 3.04-4.34 மணிவரை
சுபநேரம் 10.34-12.04 மணிவரை
காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
262
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மகளிர் தின நிகழ்வுகள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-08 08:28:03| யாழ்ப்பாணம்]
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையம் தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து நடத்தும் மகளிர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பெண்கள் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்து சிறப்பிப்பதுடன் சிறப்பு விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தீபிகா உடகம கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வில் ஆசியுரையினை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்,பெரிய கடை பள்ளிவாசல் மெளலவி மகமூட்,நாகவிகாரைத் தலைவர் மீககயடுறோ ஸ்ரீவிமலஹிம்ஸ்ரீ ஆகியோர் வழங்கவுள்ளதுடன் தேசிய சமாதானப் பேரவைப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா ,மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் சறோஜா சிவச்சந்திரன், தேசிய சமாதானப் பேரவையின் பிரதான நிர்வாக அதிகாரி திருமதி றெஜினா இராமலிங்கம், வண.பிரவீன் அடிகளார், சுவியான் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் 500ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தாம் சந்தித்த அனுபவங்களையும் சாதித்த சாதனைகளையும் எடுத்துக்காட்டவுள்ளதோடு யாழ்ப்பா ணத்தில் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக இம் மாநாட் டில் சிபார்சு செய்யப்பட்ட விடயங்களை பிரதான அதிகாரிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.
மேலும் இத்தினம் ஓர் தேசிய விடுதலை தினமாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் கோசம் எழுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்