இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள் மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம்
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம்
முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்
07.09.2010
(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை
மகம் பின்னிரவு 3.23 மணிவரை
இராகுகாலம் 3.04-4.34 மணிவரை
சுபநேரம் 10.34-12.04 மணிவரை
காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
“நேற்றைக்கு அந்தத் தெரு முனையில வித்தைக்காட்டிக் கொண்டிருந்தவர் நீங்கதானே!” “அடியேன் தான்!” அது எப்படி? காசு-பணத்தையயல்லாம் வாங்கி வாயில் போட்டு விழுங்குறீங்க... பின் அதையயல்லாம் வெளியே எடுக்கிறீங்க?’ “இதோ இருக்கேத இது வயிறு இல்லீங்க... வங்கி! இதில் பணம் போடலாம். எடுக்கலாம். இப்ப ஒரு ரூபாய் கொடுங்களேன்... காட்டுகிறேன்.”
“இந்தாங்க” “இப்ப பாருங்கதவாயில போடுறன். ம்... விழுங்கி விட்டேன். உங்கள் பணத்தை வங்கியில் போட்டாச்சு!’ “ஆகா...” இப்ப எடுக்கிறன் பாருங்க. ம்... இந்தாங்க!’ “என்னங்க இது? ஒரு ரூபாய் தானே கொடுத்தேன். இரண்டு ரூபாய் வந்திருக்கு?” ‘நான் சொன்னேன் தானே இது வங்கி என்று. அதுதான் வட்டியோட வந்திருக்கு. இந்தாங்க வைச்சிருங்க.’
“தாங்ஸ்! நான் கூட பேப்பரில் ஒரு செய்தி படிச்சேன்?”
“ “என்ன படிச்சீங்க?” “மலேசியாவில் ஓர் ஆளைப் பாம்பு கடித்து விட்டதாம். உடனே அவருக்குக் கோபம் வந்து அந்தப் பாம்பைப் பிடித்து விழுங்கிவிட்டாராம். அதன் பின் வயிறு வலித்திருக்கிறது. ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் 12 அங்குல பாம்பு வயிற்றில் இருந்ததாம்.”
“உயிரோடவா?” “ இல்லை... செத்துப் போய்?”
“அதுதானே பார்த்தேன்! நான் உயிரோடு எடுத்துவிடுவேன்”
“உங்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராதுங்க... இன்னொரு உதவி...”
“என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க!”
“ஒரு ரூபாய் கொடுத்தேன்தஇரண்டு ரூபாய் வந்தது. இந்தாங்க நூறு ரூபாய். இதை விழுங்குங்க. என்ன வருகிறது பார்ப்போம்”.
“ஓ... பேஷா! குடுங்கதம்... விழுங்கியாச்சு!”
“என்னங்க இது? ஏப்பம் வருகுது. பணம் என்னாச்சு?”
“அதை பிக்ஸ்ட் டிபோசிற்றில் போட்டச்சு!”
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்