Breaking News:
  • நல்லூரானுக்கு இன்று தேர்
  • அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்
  • அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
  • யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்!
  • இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள்  மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம் சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம் முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம் விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம் தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம் குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின்  ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம் எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம் குடும்பத்தில்  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்

07.09.2010

(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)

சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை

மகம் பின்னிரவு 3.23 மணிவரை

இராகுகாலம் 3.04-4.34 மணிவரை

சுபநேரம் 10.34-12.04 மணிவரை

காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

262

இதய வாசல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-06 07:59:24| யாழ்ப்பாணம்]

ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் ஏழை. ஆதலால் ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்தப் பெரியவரும் மனைவியும் அந்தக் குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து யாரே திடீரென்று கதவை தட்டும் சத்தம் கேட்டது. பெரியவர் விழித்துக் கொண்டார்.மனைவியை எழுப்பினார்.

“வெளியே யாரோ வழிப்போக்கர்... நமக்குத் தெரியாத நண்பர் வந்திருக்கிறார் போல இருக்கு... கதவைத் திற!” என்றார். அதற்கு அந்த அம்மா “உள்ளே இடமே இல்லையே... நம்மிருவருக்குமே இங்கே இடம் போதாதே... அப்படி இருக்கும் போது இன்னும் ஒரு ஆள் எப்படி உள்ளே இருக்க முடியும்?”என்றார். அதற்கு அவர் சென்னார்.

“இது ஏழையின் குடிசை ...இதில் எத்தனை பேர் வந்தாலும் இடம் உண்டு” என்றார். “நான் யதார்த்தமாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம் பேசுகிறீர்களா” என்றார் அந்த அம்மா. அதற்கு அவர் சென்னார்: மனதில் இடமிருந்தால் இந்தக் குடிசையையே அரண்மனை மாதிரி நம்மால் உணர முடியும்.உள்ளம் குறுகியிருந்தால் ஒரு பெரிய அரண்மனை கூட சின்னதாகத்தான் தெரியும்.

நம் வீட்டு வாசல் தேடி வந்திருக்கும் ஒரு மனிதனை நாம் எப்படி போ என்று சொல்ல முடியும்? இதுவரைக்கும் இந்தக் குடிசையில் நாம் இரண்டு பேர் படுத்திருந்தோம். இந்த இடத்தில் நிச்சயமாக மூன்று பேர் படுக்க முடியாது.ஆனால் குறைந்தது மூன்று பேர் உட்காரலாம். அதனால் நாம் எல்லோரும் உட்கார்ந்தால் இன்னும் ஒரு ஆளுக்கு இங்கே இடம் கிடைக்கும் என்றார்.

அந்த அம்மா கதவைத் திறந்தார். அந்த ஆள் உடம்பு முழுவதும் நனைந்து போய் நின்றுகொண்டிருந்தான். கதவைத் திறந்ததும் உள்ளே வந்தான். மூன்று பேரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். சிறிது நேரம் கழித்து இன்னும் இரண்டு பேர் வந்து கதவைத் தட்டினார்கள். உடனே அந்தப் பெரியவர் “வேறு யாரோ வந்திருக்கிறார்கள் போல இருக்கு ... போய் கதவைத் திறவுங்கள்” என்றார்.

சிறிது நேரத்திற்கு முன் உள்ளே வந்தவன் சொன்னான். “கதவைத் திறப்பதா...இங்கே இடமே இல்லையே” என்றான். சிறிது நேரத்திற்கு முன் இவன் வெளியில் நின்று கொண்டிருந்தான். இந்தப் பெரியவரின் மனதினால் தான் நமக்கு உள்ளே இடம் கிடைத்தது என்பதை மறந்து விட்டான். என்னத்துக்கு கதவைத் திறக்கணும்? வேணாமே என்றான்.

அன்பு தான் உங்களுக்கு இடம் கொடுத்தது. அந்த அன்பு இன்னும் இருக்கிறது. அது உங்களோடு முடிந்து போகவில்லை. தயவு செய்து கதவைத் திறந்து விடுங்கள்... நாம் இப்பொழுது கொஞ்சம் விலகித் தானே உட்கார்ந்திருக்கிறோம். இனிமேல் கொஞ்சம் நெருங்கி உட்காரலாம் சரியாகி விடும் என்றார் அந்தப் பெரியவர். கதவைத் திறந்தார்கள்.

அந்த இரண்டுபேரும் உள்ளே வந்தார்கள். சிறிது நேரத்திற்குப்பின் ஒரு கழுதை வந்து கதவை தலையால் முட்டியது. உடம்பு முழுவதும் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது அந்தப் பெரியவர் கதவோரமாக உட்கார்ந்திருந்த ஆளிடம் “கதவைத் திறவுங்கள். யாரோ ஒரு புது நண்பர் வந்திருக்கிறார்” என்றார்.

அந்த ஆள் வெளியே எட்டிப் பார்த்துவிட்டு” கழுதை ஒன்று நிற்கிறது. அதற்காக நாம் திறந்து விட வேண்டியதில்லை” என்றான். “இங்கே மிருகங்களைக்கூட மனிதர்களாக நடத்தித்தான் எனக்குப் பழக்கம். தயவு செய்து திறந்து விடுங்கள்” என்றார். “இங்கே இடம் இல்லையே” என்று சொன்னார்கள் எல்லோரும்.

அதற்கு அவர் சொன்னார். “இங்கே நிறைய இடம் இருக்கிறது. உட்காருவதுக்குப் பதிலாக எழுந்து நிற்கலாம். கவலைப்படாதீர்கள். அப்படித் தேவைப்பட்டால் நான் வெளியில் இருந்து கொள்கிறேன்” என்றார்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றார் திருவள்ளுவர். அது இதுதான். வாழ்க்கையில் அமைதியான நேரம் எது தெரியுமா? எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அன்பு செலுத்துகிற நேரம் இருக்கு பாருங்க... அதைவிட அமைதியான நேரம் வேறெதுவுமில்லை என் கிறார் ஒரு பெரியவர். நம்ம ஆள் ஒருத்தன் இருந்தான். “எங்க வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்கள் வருவதுண்டு. எவ்வளவு பேர் வந்தாலும் கதவைத் திறந்து விட்டு நான் வெளியில் போய் விடுவேன் சேர்” என்றான்.

“ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்டேன்.” “நான் வீட்டுக்குள் இருந்தால் அவர்களுக்கெல்லம் சாப்பாடு போட வேண்டியிருக்கும். அதனால் தான் வெளியில் போய் விடுகிறேன்” என்றார்.

தென்கச்சி.கோ சுவாமிநாதன்

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்