ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம்
கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம்
பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம்
பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில் தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்
09.09.2010
(ஆவணி 24, வியாழக்கிழமை)
பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை
உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை
இராகுகாலம் 1.34-3.04 மணிவரை
சுபநேரம் 7.34-9.04 மணிவரை
நல்லைக் கந்தன் பூங்காவனம்.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
264
குறிகாட்டுவான் பிரதேச அபிவிருத்திக்கு மூன்று மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-05 06:17:52| யாழ்ப்பாணம்]
புங்குடுதீவு குறிகாட்டுவான் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந் திரசிறியினால் மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து வரும் உல்லாசப் பயணிகள் நயினாதீவுக்குச் செல்வதால் குறிகாட்டுவான் பகுதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு ஆளுநரினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியினைப் பயன்படுத்தி குறிகாட்டுவான் பகுதியில் மலசல கூடங்கள், வாகனத்தரிப்பிடம் மற்றும் பயணிகள் தங்குவதற்கான இடம் என்பன கட்டப்பட்டுவருகின்றன.
வேலணை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பன இணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன. இதேவேளை அப்பகுதியில் 10 மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு சேவாலங்கா நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்