இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள் மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம்
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம்
முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்
07.09.2010
(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை
மகம் பின்னிரவு 3.23 மணிவரை
இராகுகாலம் 3.04-4.34 மணிவரை
சுபநேரம் 10.34-12.04 மணிவரை
காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
262
மோர்கன் சிறப்பான சதம்; தொடர் இங்கிலாந்து வசம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-04 06:56:05| யாழ்ப்பாணம்]
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண் டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கி லாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.
பங்களாதே´ன் மிர்பூரில் உள்ள பங்களா தேசிய மைதானத்தில் நேற்று முன்தினம் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடை பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 6விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் முஸ்பிகுர் ரஹ்மான் 76ஓட்டங்களையும், இம்ருல் கயிஸ் 63ஓட்டங்களையும் பெற் றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி யின் சார்பில் ரிம்பென்சன் மூன்று விக்கெட் டுக்களையும் கிரஹம் ஸ்வான் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 261ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கி லாந்து அணி 48.5ஓவர்களில் எட்டு விக் கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டி யது.இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பலர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றதனால் தோல்வியடையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும் இயோன் மோர்கனின் அபார துடுப்பாட்டத் திறமையினால் இங்கிலாந்து வெற்றியீட்டியது.இங்கிலாந்து அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் இயோன் மோர்கன் 104பந்துகளில் ஆட்டமிழக்காது 110ஓட்டங் களையும், அலிஸ்டயா குக் 60ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் அப்துர் ரசாக் மற்றும் சகிபுல் ஹசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
சிறந்த துடுப்பாட்டத் திறமையின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற இயோன் மோர்கன் போட்டியின் ஆட்டநாயக னாகத் தெரிவு செய்யப்பட்டார்.மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 2:0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைத் தனதாக்கியது.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்