இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள் மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம்
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம்
முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்
07.09.2010
(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை
மகம் பின்னிரவு 3.23 மணிவரை
இராகுகாலம் 3.04-4.34 மணிவரை
சுபநேரம் 10.34-12.04 மணிவரை
காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
262
மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி தொகை வழங்கல் - யாழ்.அரச அதிபர் அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-04 06:50:47| யாழ்ப்பாணம்]
தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளிப்பில் நிகொட்-02 இற்கு ஊடாக மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான வாழ் வாதாரக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த 30. 04.2009 ஆம் திகதி தொடக்கம் 31.10.2009 ஆம் திகதி வரை மீளக்குடியமர்ந்த தகுதியுடைய 16 ஆயிரத்து 831 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவு தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இக் குடும்பங்களுடன் யாழ்.மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து மீண்டும் மீளக் குடியமர்ந்த வேலணை, யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் நெடுந்தீவு, மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளையும் சேர்ந்த 901 குடும்பங்களுக்கும் இத் தொகை வழங்கப்படவுள்ளது.
இக் கொடுப்பனவுகள் யாவும் மார்ச் மாதம் 27 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதால் இக் கொடுப்பனவுக்குத் தகுதியுடைய மீளக் குடியமர்ந்த குடும்பங்கள் இன்றுவரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தவறியிருப்பின் உடனடியாகக் கொடுப்பனவு தொடர்பான விண்ணப்பத்தை கிராம சேவை யாளரிடம் பெற்றுப் பூர்த்தி செய்து கிராம சேவையாளரது சிபார்சுடன் தங்கள் பிரதேச செயலாளரிடம் அல்லது உதவி அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
கொடுப்பனவு வழங்கவுள்ள குடும்பங்களுக்கான அனுமதிக் கடிதம் மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து பிரதேச செயலாளர், உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியாகவும் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகவும் வழங்கப்படவுள்ளது.
சகல தகுதியுடைய மீளக் குடியமர்ந்த குடும்பங்கள் தவறாது தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்பு அத்தாட்சி பத்திர சான்றிதழுடன் எங்களால் பின்னர் அறிவிக்கப்படும் பிரதேச செயலகத்திலோ உதவி அர சாங்க அதிபர் பணிமனைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ சென்று உறுதிச் சீட்டில் கையயாப் பத்தையிட்டு அனுமதிக் கடிதத்தைப் பெற்று வங்கியில் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளவுள்ளோர்,
31.10.2009 ஆம் திகதிக்குப் பின் மீளக் குடியமர்ந்த குடும்பங்களுக்கும் வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்க ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் க. கணேஷ் அறிவித்துள்ளார்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்