Breaking News:
  • நல்லூரானுக்கு இன்று தேர்
  • அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்
  • அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
  • யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்!
  • இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள்  மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம் சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம் முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம் விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம் தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம் குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின்  ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம் எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம் குடும்பத்தில்  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்

07.09.2010

(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)

சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை

மகம் பின்னிரவு 3.23 மணிவரை

இராகுகாலம் 3.04-4.34 மணிவரை

சுபநேரம் 10.34-12.04 மணிவரை

காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.

 
 
 
 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

262

"வலிமையான எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தும் வரை நான் போட்டியிடுவேன்' - பத்திரிகை ஆசிரியர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:50:57| யாழ்ப்பாணம்]

MAHINDA-200_54எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத் தும் வரை எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர் தல்களிலும் தான் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சிக் கட்சியினருக்கும் அரசாங் கத்திற்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது 18-வது அரசி யல் [மேலும் வாசிக்க...]

அரசியல் சாசனத் திருத்தப் பிரேரணை சமர்ப்பிக்கும் நாளில் வன்முறை அச்சம் - விசேட பாதுகாப்புக்கு உத்தரவு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-06 07:29:04| யாழ்ப்பாணம்]

ஆளும் கட்சியின் உத்தேச அரசியல் சாசனத்திருத்தம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் தினத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் மற்றும் இராணு வத்தின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள [மேலும் வாசிக்க...]

விட்டுக் கொடுப்பை மேற்கொள்ள கூட்டமைப்புத் தயாராக வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-05 07:25:48| யாழ்ப்பாணம்]

ranil-2தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய கால மாற்றத்தைக் கட்டாயம் உணர்ந்து சில விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயா ராக வேண்டும் என்று இரு நாள்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்ற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு, இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் சம்பந்த [மேலும் வாசிக்க...]

அரசியல் அமைப்புத் திருத்தம் குறித்து கூட்டமைப்பு திங்களன்று ஆராயும் - மாவை. எம்.பி. விளக்கம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:54:34| யாழ்ப்பாணம்]

உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் ஆறாம் திகதி கூடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன் றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என நாடாளு மன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்புத் திருத்தத்தில் உள் ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என மாவை. சேனாதிராஜா கூறியுள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் எவ்வாறாயினும் அரசியல் அமைப்புத் திருத [மேலும் வாசிக்க...]

இலங்கைக்கான விசேட தூதுவராக நிருபமா ராவ் விரைவில் நியமனம்! - இந்திய மத்திய அரசு புது வியூகம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-03 07:56:14| யாழ்ப்பாணம்]

nirubamaஇலங்கை இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்காக இந்தியா தனது விசேட தூதுவராக தற்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவை நியமிக்கவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்திய வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நிருபமா ராவை இலங்கைக்கான இந்திய விசேட தூதுவராக நியமிப்பதை இந்திய மத்திய அரசும், தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் விரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் நுழைவு இலங்கைய [மேலும் வாசிக்க...]

இராணுவம் காணிகளை சுவீகரிக்கமுன் வன்னியில் மீள் குடியமர்வு அவசியம் - நிருபமா ராவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-02 07:51:41| யாழ்ப்பாணம்]

இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களை மீள்குடியமர்த்தாமல் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்கவுள்ளனர் அதற்கு முன்னர் வன்னியில் மீள்குடியமர்வு அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர [மேலும் வாசிக்க...]

வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும் - யாழ். வந்த நிருபமா உறுதியளிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-01 07:44:35| யாழ்ப்பாணம்]

வடக்கு, கிழக்கு மக்களுக்கு திறந்த மனத்துடன் தாராளமான உதவிகளை இந் தியா தொடர்ந்து வழங்கும் என யாழ்ப் பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த அந் நாட்டு வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற் கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து தெரிவு செய்யப்பட்ட குடும் பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்ட உதவிகளை வழங்கி வைத்தார்.

அத்துடன் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற யாழ்.நிலைமை கள் தொடர்பான சட்டதிட்டம் மற்றும் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற பொது அமைப்புக [மேலும் வாசிக்க...]

ஒருவர் மூன்று தடவைகள் ஜனாதிபதியாக இருக்கும் அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பு - முன்னாள் ஜனாதிபதிக்கும் வாய்ப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-31 09:08:48| யாழ்ப்பாணம்]

இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது ஆட்சிக் காலத் துக்கும் தொடருவதற்கு வழி செய்யும் அரசியலமைப்புத் திருத்தத்துக் கான பிரேரணைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங் கியுள்ளது. அந்தப் பிரேரணை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது நீங்கிவிட்ட நிலையில் ஒருவார காலத்தில் ஜனாதிபதியின் ஆட்சிக் காலங்களுக்கான கட்டுப்பாடு நீங் கும் என்று கூறப்படுகிறது.இந்த திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் 2016ஆம் ஆண்டு நடக் கவுள்ள ஜனாதிபதித [மேலும் வாசிக்க...]

இலங்கைப் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மிக முக்கியமானது! - பசில் எம்.பி. தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 07:34:26| யாழ்ப்பாணம்]

இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கி யமானது என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். இலங்கை யில் போர் முடிந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடிய மர்ந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையில் போர் முடிபடைந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடிய மர்ந்துள்ள கிளிநொச்சி மாவட்ட வ [மேலும் வாசிக்க...]

புலிகளை தோற்கடித்ததன் மூலம் நாடு ஒன்றிணைக்கப்பட்டது மக்கள் ஒன்றிணையவில்லை - அமைச்சர் டியூ.குணசேகரவின் உண்மை விளக்கம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-29 08:08:12| யாழ்ப்பாணம்]

யுத்தம் முடிபுக்குக் கொண்டு வரப்பட் டதன் மூலம் நாடு ஒன்றிணைக்கப்பட் டுள்ள போதிலும் மக்கள் இன்னமும் ஒன்றிணைக்கப்படவில்லை. இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதி ரான யுத்தத்தில் வெற்றியீட்டியதன் மூலம் நாட்டின் நிலப்பரப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டன. எனினும் இன சமூகங்கள் இன் னமும் ஒன்றிணைக்கப்படவில் லை. இன சமூகங்களை இணை க்க வேண்டிய பாரிய பொறுப்புக் காணப்படுகின்றது.சில பிரச்சினைகளுக்குத்தனிக் கட்சி ஒன்றினால் தீர்வு காண முடி ய [மேலும் வாசிக்க...]

 Site Design & Hosting
By Speed IT net

காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

Valampurii.com All Rights reserved 1999-2010

இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்