இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள் மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம்
சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம்
முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம்
விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம்
குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின் ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்
07.09.2010
(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை
மகம் பின்னிரவு 3.23 மணிவரை
இராகுகாலம் 3.04-4.34 மணிவரை
சுபநேரம் 10.34-12.04 மணிவரை
காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
262
என் மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்பேன் - கைதுக்கு முன் சீமான் பேட்டி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-16 08:03:07| யாழ்ப்பாணம்]
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர் படுகொலையை கண்டித் தும் கடந்த 10ஆம் திகதி சென்னை கலக்டர் அலுவலகம் அருகில், நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய சீமான், அடிக்கு அடி என்கிற பாணியில், தமிழகத்திற்கு சிங்களவர்களை அடிப்பேன் என்று பேச,கூட்டத்தில் ஏகமாக கைதட்டல்கள்!. உடனே,சீமான் மீது வழக்குப்பதிவு செய்தது பொலிஸ். அவரைக் கைது செய்ய வீடு,அலுவலகத்திற்கு படை எடுத்தது. சீமான் தலைமறை வாகிவிட்டார்.
ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன்,இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். ஈழப்போர் உக்கிரமான சூழலிலும் இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் அவர். இதற்கெல்லாம் பரிசாக,சிங்கள மந்திரி ஒருத்தர் ஐ.நா. செயலருக்கு கொடுத்திருக்கும் பட்டம் ”பிம்ப்” கொச்சையாகச் செல்வதானால் ”கூட்டிக்கொடுக்கும் புரோக்கர்”
முள்ளிவாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறது.இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததா கச் சொல்லப்பட்ட நிலையிலும், இன் னமும் கொடூரங்களும் கொடுமை களும் தொடர்வதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி, நாம் தம [மேலும் வாசிக்க...]
இலங்கை மீது ஐ.நா. விசாரணை போர்க் குற்றம் நிரூபணமானால்... [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-05 11:37:04| யாழ்ப்பாணம்]
இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க ஜனாதிபதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனச்சாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது ஐ.நா.சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணைக் கமினால் உச்ச பட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும்தஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராக குரல் உயர்த்தி இருப்பது [மேலும் வாசிக்க...]
வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் - பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி. உரை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-05 10:37:42| யாழ்ப்பாணம்]
2010ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் இவ்வாண்டில் இலங்கை எதிர்பார்க்கும் மொத்த வருமானம் கிட்டத்தட்ட 84 ஆயிரம் கோடி ரூபாவாகவும் மொத்த செலவீனம் 1279.82 ரூபாவாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக எங்களுடைய மக்களுக்கு ரயில் போக்குவரத்து, நீர்விநியோக இணைப்புக்கள், புதிய மின்சார இணைப்புக்கள், தேசியப் பாதைகள் , புதிய பாலங்கள் , மாகாண பாதை கள் , கிராமியப்பாதைகள் புனரமைப்பு என [மேலும் வாசிக்க...]
ஜனாதிபதித் தேர்தல் இறை (வன்) செயல். [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-26 11:13:39| யாழ்ப்பாணம்]
ஜனாதிபதித் தேர்தல் இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்ற நினைப்பு எவரிடமும் இருந்ததில்லை. இன்னமும் ஒன்றரை வருடங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்ற போதிலும், அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடப்பட்டது.
வன்னியுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் தனது வெற்றி பூரணமாக உறுதி செய்யபடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எண்ணியிருந்தார்.ஒன்றரை வருடங்கள் தாமதித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் போது அந்தக் கால இடைவெளியில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்கள் தனது வெற்றிக்கு சாதகமாக அமையாது போகலாம [மேலும் வாசிக்க...]
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்