படகில் இருந்து இறங்க இலங்கை அகதிகள் தயார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-04-02 05:52:06| யாழ்ப்பாணம்]இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பாரிய அசெளகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலைமையை மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது எனவும் இந்தோனேசிய அரசு உறுதியான உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் படகில் இருந்து தாம் இறக்கத் தயார் எனவும் அகதிகளின் புதிய பேச்சாளர் நிமல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக ஒரே படகில் தங்கியிருந்த தாங்கள் எவ்வித வசதிகளும் இன்றி அவஸ்தைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 240 அகதிகள் உள்ள இந் [மேலும் வாசிக்க...] நல்லை ஆதீன முதல்வரின் - அருளாசிச் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 13:04:56| யாழ்ப்பாணம்]யாழ் .மக்களின் அபிமானத்துக்குரிய வலம்புரி நாளிதழுக்கு இன்று பத்தாண்டுகள் பூர்த்தியாகிப் பதினொரு வயது ஆரம் பமாகிறது.
உரிய காலத்தில் உதய நேரத்தில் இதய தாகந்தீர்க்க ஒவ் வொரு நாளும் உண்மையுடன் வெளிவரும் நல்ல பத்திரிகை வலம்புரி. அமைதியும்த ஆனந்தமும்த மங்களமும்த மாட்சிமையும் யாழ். குடாநாட்டில் மலர வேண்டுமென்று ஒரு நல்ல நோக்குடன் வெளிவருவது வலம்புரி.
காலத்தின் தேவையை உணர்ந்து யாழ். மக்களுக்கு அவ் வப்போது அவசிய செய்திகளை அழகு தமிழில் உரிய காலத்தில் தந்து மேலும் சிறப்புற வைக்கும் உனது பணி வாழ்க!
எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற ம [மேலும் வாசிக்க...] நடுவு நிலை தவறா நாளிதழ் - இந்துமத குருபீடாதிபதி ஆசி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 13:29:58| யாழ்ப்பாணம்]வலம்புரி நாளிதழ் 10ஆவது ஆண்டை நிறைவு செய் வதையிட்டு பேருவகை அடைகின்றேன்.
நடுவு நிலை தவறாத வலம்புரி நாளிதழின் பணி தமிழ் மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். மக்களின் தேவை அறிந்து தகவல்களை முந்தித் தருவதில் வலம்புரியின் காத்திரமான பங்கை எவரும் மறந்துவிட முடியாது.
கண்ணபரமாத்மாவின் கரங்களில் வீற்றிருக்கும் வலம் புரிச்சங்கின் மகிமை வலம்புரி நாளிதழுக்கும் உண்டு.
தமிழ்ப்பணி
த சமயப்பணித ஆத்மீகம் த அரசியல்த மருத்து வம் என தனியான - தனித்துவமான தகவல்களை வெளியிட்டு வீறு நடைபோடும் வலம்புரி நாளிதழ் மென்மேலும் சிறப்புற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ வ [மேலும் வாசிக்க...] சுவாமி சித்ரூபானந்தாவின் - ஆசிச் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:58:26| யாழ்ப்பாணம்] வலம்புரி நாளிதழ் இன்று தனது 10 ஆவது அகவையை நிறைவு செய்கிறது. பத்திரிகை ஆரம்பித்த காலத்திலிருந்து வலம்புரியின் வளர்ச்சியில் ஆர்வமாகவே செயல்பட்டோம்.
கூடிய பகுதி ஆன்மீகத்துக்கு முக்கியம் அளிக்க வேண்டும் என்ற எமது விருப்பத்தை வலம்புரி நிறைவேற்றி வருவது மகிழ்ச்சிக்குரியது. இது தான் நமது சமூகத்தின் இன்றைய தேவை.
இவர்கள் இதனைச் செம்மையாகச் செயற்படுத்தி வருகின்றனர். இவர்கள் யாவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.
சுவாமி சித்ரூபானந்தா [மேலும் வாசிக்க...] மாவை ஆதீனகர்த்தாவின் - ஆசிச் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:55:56| யாழ்ப்பாணம்]வலம்புரி நாளிதழ் தனது பத்தாவது ஆண்டு நிறைவுதினத் தில் சகலதுறை மக்களது ஆசிகளுடன் முன்னகர்கிறது. வலம் புரியின் ஆரம்பநாளிலும் யான் ஆசிகள் வழங்கினேன்.
வலம்புரியின் செய்திகளைத்தாங்கி நிற்கும் பைந்தமிழ் மொழி அதனைக் கோர்த்தும் தொடுத்தும் அணிகலனாக அமையும் அழகுத வாசிப்போருக்கு அவை ஊனாகவும் அதன் வழி உணர் வைச் சுண்டியிழுக்கும் தன்மைகளோடு ஓர் புத்துணர்ச்சியை அவர்களிடம் தந்து நிற்பதும் ஓர் சிறப்பம்சமே.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
என வலம்புரி செய்திகள்த கட்டுரைகள்த விமர்சனங்கள் யாவும் முத்தமிழை உயர்த்தும் பாவனைய [மேலும் வாசிக்க...] முதற்தர நாளிதழ் - தண்டபாணிக தேசிகர் ஆசி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:45:31| யாழ்ப்பாணம்]அதிகாலை வேளை சங்குநாதம் எழுப்பி அனைவரது கரங் களிலும் தவழும் இன்றைய ஜனரஞ்சகமான இதழான வலம்புரி 10 ஆவது அகவையினைப் பூர்த்தி செய்து 11ஆவது அகவையில் கால் பதிப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய கணனியுகத்தில் இதழியல் ஊடான பணி பற்பல பரிமாணங் களை எடுத்துள்ளது.
அவற்றில் இப்போது ஈநம்பர் வண்டு இடத்தை பிடித்திருப்பது வலம்புரியேயாகும். வலம்புரி தனது 10ஆவது ஆண்டு பூர்த்தியை கண்டு பூரிப்படைகின்றது. அத்துடன் மட்டும் நின்று விடாது வலம் புரியுடன் இணைந்து ஞாயிறு தோறும் வெளிவரும் வாசகர் களின் அபிமானத்துக்குரிய சங்குநாதம் அரசியல்களம்த வியாசர் பதில் [மேலும் வாசிக்க...] உள்ளத்தூய்மை நிறைந்த வலம்புரி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:39:58| யாழ்ப்பாணம்]வலம்புரி நாளிதழ் தனது தனித்துவத்தைப் பேணி 10 ஆண்டுகள் சிறப்புற நிறைவேற்றியதனை ஒட்டிய சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தியினை வழங்குவதில் பெரும் உவகை கொள்கின்றேன். மூன்றாவது கண் என்ற வகையில் செய்திகளை திரட்டி அதனை மக்களுக்கு நடு நிலைமையுடன் முன் நிறுத்தி நிற்பதில் வலம்புரி அதன் பெயருக்கேற்ப தனித்துவத்தைக்கொண்டிருக்கின்றது.
வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் என்ற வகையில் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கலாசார மேம்பாட்டிற்கும் பெரும் பங்களிப்பினை செய்து வரும் வலம்புரியினை வாழ்த்துவதி [மேலும் வாசிக்க...] தரமான பத்திரிகை - பேராயர் ஆசிச் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:25:00| யாழ்ப்பாணம்]கடந்த 10 வருட காலத்தில் "வலம்புரி" யாழ். மக்கள் அனைவரும் தினசரி படிக்க வேண்டிய தரமான பத்திரிகையாக வளர்ச்சியுற்ற தனைக் கண்டு பெருமகிழ்வடைகின்றேன்.
சர்வதேச அரங்கில் நடைபெறும் பல்வேறு விடயங்களை சுவையாகவும் தெளிவாகவும் மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றது.
தென்னிந்திய பருவ இதழ்களும் தென்னிலங்கை பத்திரிகைகளும் வராமல் இருந்த கால கட்டத்தில் ஈஈவலம்புரி "எமது பிரதேச மக்களுக்கு நல்லறிவு புகட்டி வந்தது. ஆன்மீகத்திலும் இலக்கியத் திலும் மக்கள் ஆர்வம் கொள்ளும்படி சிறந்த கட்டுரைகளை வழங்கி வருகின்றது. அரசியலில் தனக்கென ஓர் உறுதியான கொள்கையை வகுத் [மேலும் வாசிக்க...] மகத்தான சாதனை. - யாழ். அரச அதிபர் வாழ்த்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:18:49| யாழ்ப்பாணம்]"கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்'' என்ற வள்ளுவன் சொல்லுக் கிணங்க வாசகரின் உள்ளங்களைத் தன் திறம்படச் சொல்லும் திறனினால் ஈர்த்து மகத்தான சாதனையுடன் வலம் வரும் வலம்புரியின் சங்குநாதம் எம் மண்ணில் ஒலிக்கத் தொடங்கி இன்று ஒரு தசாப்தம் நிறைவுறுகின்றது.
காலோசிதமான ஆசிரியர் தலையங்கங்கள்த கருத் தாழம்மிக்க கட்டுரைகள் என்பவற்றுடன் சமூகத்தின் சகல தரப்பினர்க்கும் தேவையான விடயங்கள் அனைத்தையும் தெளிவாய்த் தருவதால் தனிச்சிறப்புடன் திகழும் வலம்புரி நன்மையும் தீமையும் நலமுற நாடி பத்திரிகை தர்மத்தின் வழி வழுவாது தன் பணியில் [மேலும் வாசிக்க...] நடுவு நிலையின் சான்று [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:12:19| யாழ்ப்பாணம்]வலம்புரி பத்திரிகை ஒரு தசாப்தத்தினைப் பூர்த்தி செய்து 11ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு வெளிவரும் சிறப்பு மலருக்கு வாழ்த்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்னல்கள் மிகுந்திருந்த காலகட்டங்களில் எல்லாம் வலம்புரி பத்திரிகையானது எவ்வித தடைகள் குறைபாடுகளின்றி வெளிவந்துகொண்டிருப்பது அப்பத்திரிகை நடுவு நிலையில் நின்று செயற்படுவதற்கு தக்க சான்றாகும். இதன் காரணமாகவே வலம்புரியின் வளர்ச்சி அதீதமாக அதிகரித்த வண்ணமுள்ளது.
நேர்மையான வழியில் நின்று உண்மைகளை எடுத்தியம்பி தேவைகளுக்கேற்ற விதத்தில் ஆசிரிய தலையங்கங்களை [மேலும் வாசிக்க...] பண்பாட்டுணர்வு கொண்ட நாளிதழ் துணைவேந்தர் வாழ்த்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:08:35| யாழ்ப்பாணம்]ஒரு தசாப்தகால நிறைவுடன் புதிய ஆண்டில் காலடி பதிக்கும் வலம்புரி நாளிதழுக்கான வாழ்த்தினைத் தருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
பிராந்திய செய்தித்தாள், பண்பாட்டுக்கு அரணாக விளங்கும் யாழ்ப்பாண மக்களின் அறிவை விரிவாக்கத்திலும் ரசனை மேம்பாட்டிலும் வலம்புரியின் இடம் குறிப்பிடத்தக்கது.
சமூக உணர்திறனும், பண்பாட்டுணர்வும் கொண்ட அதன் ஆசிரிய தலையங்கங்களும், ஏனைய ஆக்கங்களும் நிறைந்த தொடர்பியல் வல்லமை கொண்டவை. நாளை பற்றிய நம்பிக்கையை கட்டமைத்தலிலும், நாளையின் திசையினை நெறிப்படுத்தலிலும் நாளிதழ்களின் பொறுப்பு பெரியது.
இந்தப் பெரும் பணியில் வலம்புரி [மேலும் வாசிக்க...] யாழ். ஆயரின் வாழ்த்துச் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 12:05:15| யாழ்ப்பாணம்]இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பமும் ஊடகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. யாழ். பிரதேசத்தில் 10 வருடங்களாக தனித்து நின்று தனக்கே உரிய பாங்கில் செய்திகளையும் ஆக்கங் களையும் மக்களுக்கு அளித்துவரும் ஈவலம்புரி டு பத்திரிகையின் ஆசிரியரையும் சக ஊழியர்களையும் வாழ்த்துகின்றோம்.
தமிழர் வரலாற்றில் கடந்த 10 வருடங்களும் மிக மிக சிக்கலான காலங்களாகும்.
இக்காலப்பகுதியில் பக்க சார்பற்ற செய்திகளைத் திரட்டி தேவையான ஆக்கங்களுடன் வலம்புரிப் பத்திரிகை வெளிவந்ததை நன்றியோடு நினைவு கூருகின் றோம்.
10 வருடங்கள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் அசுர வேகத்தில் வ [மேலும் வாசிக்க...] வலம்புரியை வாழ்த்திய தெய்வங்களின் நினைவில்....நிறை வலம்புரியே வாழி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 11:36:19| யாழ்ப்பாணம்]பொன்னுயர் யாழ்ப்பாணத்தில்
பொருந்திய புவனந்தன்னில்
மன்னிய செய்தி யயல்லாம்
மக்களின் நன்மைக் கேற்ப
உன்னிய கலை விளக்காய்
உதவிடும் சிகரி போல
நன்னெறி விளங்க நல்கும்
நம் வலம்புரியே வாழி
தூயசீர் இலக்கியங்கள்
சொற்பதக் கதைகள் மக்கள்
நேயநற் காவியங்கள்
நிகரில்விஞ் ஞானக்கல்வி
ஆயவை அனைவருக்கும்
அறிவுற வழங்குகின்ற
மாயனின் கரத்திலங்கும்
வலம்புரி நீயே வாழி
ஆண்டொன்றின் பூர்த்தி கண்டாய்
ஆயிரமாண்டு வாழ்வாய்
தூண்டிடும் தமிழ் சிறக்க
துதிபெறு சமய நீதி
பூண்டிடும் மக்கட் பண்பு
பொலிந்திடப் புதினம் நல்கி
நீண்டகற் பகத்தைப் போல
நிறைவலம் புரியே வாழ [மேலும் வாசிக்க...] வலம்புரியை வாழ்த்திய தெய்வங்களின் நினைவில்....வளர்மதி போன்று வளர்க [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 11:30:59| யாழ்ப்பாணம்]ஆண்டுகள் தோறும் அரிய கட்டுரைக ளுடன் அவசியமான செய்திகளையும் நடு நின்று கூறி நலம்பல புரிந்த வலம்புரி ஏடே! மேலும் பல்லாண்டு நிலவுக! பரமன் அருளால் நற்செய்திகளுடன் நல்லுணர்வூட்டி வளர்மதி போன்று வளர்க வளர்கவே...
செல்லத்துரை சுவாமிகள்
சிவத்தொண்டன் நிலையம், யாழ்ப்பாணம்.
(வலம்புரியின் 6 ஆவது ஆண்டு நிறைவையயாட்டி வழங்கிய ஆசிச் செய்தி) [மேலும் வாசிக்க...] வலம்புரியை வாழ்த்திய தெய்வங்களின் நினைவில்....உள்ளதை உள்ளபடி எழுதும் வலம்புரி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-20 11:25:11| யாழ்ப்பாணம்]பத்திரிகா தர்மத்தைப் பேணி தின மும் வெளிவரும் நமது மண்ணின் செய்தி இதழான வலம்புரி தமிழ் மண் ணுக்கு உரம் ஊட்டும் ஒரு செய்தித் தாளாகும்.
அறச் சிந்தனையை வெளிப்படுத்தி நாள்தோறும் நிகழுகின்ற செய்திகளை உண்மையும் ஒழுங்கும் நிலவக் கூடியதாக தமிழ் மக் களுக்கு உணரவைப்பது வலம்புரியாகும்.
வலம்புரி என்ற நாமம் எமது செவிகளுக்கு தித்திக் கும் ஒரு நாமமாகும். இந்த நாமத்தை தாங்கிவரும் செய்தித் தாளும் வாசகர்களை மகிழவைப்பதாகும். எனவே தொடர்ந்து வலம்புரிச் செய்தித்தாள் இம் மண்ணை பெருமை பெறவைக்க வேண்டுமென்று பிரார்த் தித்து அமைகின்றேன்.
கலாநிதி செல்வி தங்கம்மா அப்பா [மேலும் வாசிக்க...] |