போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் - "மண் சுமந்த மேனியர்' திட்டம் நேற்று வடமராட்சியில் அங்குரார்ப்பணம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 07:38:58| யாழ்ப்பாணம்]போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகின்ற மண்சுமந்த மேனியர் எனும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சியில் நடைபெற் றுள்ளது.
வடமராட்சி திக்கம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட 148 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
சுயதொழில் முயற்சிகளுக்கு வசதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் 10 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.தாய், தந்தை இருவரையும் அல்லது தாய் அல்லது தந் தையரை இழந்த மாணவர்கள் 128 பேருக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்பு [மேலும் வாசிக்க...] பாம்பு தீண்டி சிறுவன் மரணம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 06:57:41| யாழ்ப்பாணம்]தறப்பாள் கூடாரத்துள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் சிறுவனை விப் பாம்பு தீண்டியுள்ளது.மறுநாள் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குறித்த சிறுவன் மரணமடைந் துள்ளார்.உருத்திரபுரம் வடக்கை சோந்த 10 வயதுடைய ஞானசீலன் நிலக்சன் ரொபேட் என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இந்த சிறுவனின் மரண நிகழ்வுகள் நேற்று முன்தினம் உருத்திரபுரத்தில் நடைபெற்றது. அண்மையில் மீளக்குடியமர அனுமதிக் கப்பட்ட உருத்திரபுரத்தில் சிறுவனின் குடும்பத் தினர் தறப்பாளால் கூடாரம் அமைத்து வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. [மேலும் வாசிக்க...] பல்கலைக்கழகத்தின் தேவைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. நேரில் வந்து ஆராய்வு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 06:53:45| யாழ்ப்பாணம்]யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நில வும் பற்றாக்குறைகள் விரைவில் நிறைவு செய்யப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா உறுதியளித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த அவர் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், நிர்வாக உத்தி யோகத்தர்கள் மற்றும் மாண வர்களை தனித் தனியே சந் தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக்களின்போது விரிவுரையாளர்களின் பற்றாக் குறை, சுகாதார கட்டமைப்பு, நிர்வாக அலுவலர்களின் வெற்றிடம், மாணவர்களுக்கான விடுதியில் காணப்படும் குறை கள் என்பன தொடர்பாக வி [மேலும் வாசிக்க...] பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர்தினம் இன்று பழைய மாணவர்களைப் பங்கேற்குமாறு அழைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 06:51:57| யாழ்ப்பாணம்]யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி யின் ஸ்தாபகர் தினம் இன்று திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெறும்.
துணைவேந்தர் பேராசிரியர் என்.சண் முகலிங்கன் தலைமையில் இடம் பெறும். இந் நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.
கெளரவ அதிதிகளாக அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளு மன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்வர்.
இந் நிகழ்வில் பரமேஸ்வராக் கல்லூரியின் [மேலும் வாசிக்க...] சிறுத்தீவில் உல்லாச விடுதி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 06:33:30| யாழ்ப்பாணம்]தீவகம் மண்டைத்தீவுக்கு அருகாமையி லுள்ள சிறுத்தீவில் நட்சத்திர உல்லாச விருந்தினர் விடுதியை அமைப்பதற்கு தென்னிலங்கை முன்னணி நட்சத்திர உல்லாச விருந்தினர் விடுதி ஒன்று வாடகைக்கு எடுக்கவுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பணியை அடுத்த வருடம் ஆரம் பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவ தாகவும் அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் சர்வதேச ரீதியில் உல்லாசப் பயணிகளை யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்க முடியும் என நம்பப்படுவதாகவும் கூறப்பட்டது. [மேலும் வாசிக்க...] நல்லைக்குமரன் மலர் 30ஆம் திகதி வெளியீடு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-27 06:15:27| யாழ்ப்பாணம்]நல்லூர்க்கந்தன் மகோற்சவ காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகார குழு வால் வருடம் தோறும் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீடு எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும்.
காலை 10 மணிக்கு நாவலர் கலா சார மண்டபத்தில் யாழ். மாநகர சபை ஆணையாள் மு.செ.சரவண பவ தலைமையில் இடம் பெறும் இவ் வெளியீட்டு விழாவில் பிரதம விருந் தினராக யாழ். மாநகர சபை முதல் வர் திருமதி யோ.பற்குணராசா கலந்து கொள்வார்.
நூல் ஆய்வினை யாழ். பல்க லைக்கழக உயர் பட்டப்பின் படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரி யர் ச.சத்தியசீலன் நிகழ்த்துவார். முதற்பிரதியை தெல்லிப்பழைதுர்க்கா தேவி தேவஸ [மேலும் வாசிக்க...] யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் தற்கொலை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-23 06:24:15| யாழ்ப்பாணம்]யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ஒருவன் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
சுன்னாகத்தைச் சேர்ந்த வை.சாரங்கன் (வயது 29 ) என்பவரே தற்கொலை செய்து கொண் டதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சையில் சித்தியடையாத நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பரீட்சையில்சித்தி எய்தாத நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் முன்னர் தற்கொலை செய்து கொண் டமை குறிப்பிடத்தக்கது. [மேலும் வாசிக்க...] திருவெண்காட்டில் இன்று தேர்த்திருவிழா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-23 06:23:06| யாழ்ப்பாணம்]மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று நடை பெறுகிறது.
காலை 9 மணிக்கு வசந்தமண்டபப் பூçஐ இடம்பெற்று 10 மணியளவில் விநாயகப் பெரு மான் தேரில் ஆரோகணிப்பார்.
நாளை காலை தீர்த்தோற்சவம் இடம்பெ றும். [மேலும் வாசிக்க...] வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தனின் மஹோற்சவம் 15 ஆம் திகதி ஆரம்பம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-09 07:28:35| யாழ்ப்பாணம்]வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசாமி ஆலயத்தின் வரு டாந்த மஹோற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்ப மாகவுள்ளது.
இம்மஹோற்ச வத்தில் எதிர்வ ரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கி ழமை மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும்த 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கார்த்திகை திருவிழாவும்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சந் தான கோபாலர் திருவிழா வும் மாலை 5 மணிக்கு கைலாச வாகன திருவிழா வும் இடம் பெறவுள்ளது.
4 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு கஜவல்லி மஹா வல்லி திருவிழாவும்த மாலை 5 மணிக்கு வேல்விமான திருவிழ [மேலும் வாசிக்க...] நூல் அறிமுக விழா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-01 07:24:48| யாழ்ப்பாணம்]பேராசிரியர் என்.பாலகிருஷ்ணனின் இலங்கை பொருளா தாரத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள் ஓர் சமகால மீளாய்வு நூல் அறிமுகவிழா நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைக் கழக கேட்போர் கூடத்தில் யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தலை மையில் நடைபெறவுள்ளது.
இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல் கலைக்கழக வவுனியாவளாக முதல்வர் பேராசிரியர் என்.பாலகி ருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார். [மேலும் வாசிக்க...] யாழ்.மாவட்டத்தில் திங்களன்று டெங்குத் தடுப்பு சிரமதானப் பணி - யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-31 08:34:32| யாழ்ப்பாணம்] யாழ்.மாவட்டத்தில் நாளைமறுதினம் 2ஆம் திகதி திங்கட் கிழமை சகல பாடசாலைகள் மற்றும் அரச,அரசசார்பற்ற நிறுவனங்களிலும் டெங்குத்தடுப்பு, சிரமதானப்பணிகள் முன் னெடுக்கப்படவேண்டும் எனயாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,
இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்குநோய் தீவிர மாக பரவிவருவதுடன் பல உயிரிழப்புக்களையும் ஏற்படுத் தியுள்ளது.யாழ்.மாவட்டத்திலும் தற்போது டெங்கு நோயின் பரம்பல் பல இடங்களில் காணப்படுகிறது.இலங்கையில் டெங்குநோயை கட்டுப்படுத்தும் நோக் குடன் ஜனாதிபதி ம [மேலும் வாசிக்க...] இந்தியாவுக்குச் சென்று திரும்புவோரூடாக மலேரியா ஒட்டுண்ணி பரம்பல் ஆபத்து - யாழ்.பிராந்திய மலேரியா தடைப்பகுதி வைத்தியர் எச்சரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-31 08:32:18| யாழ்ப்பாணம்]இந்தியாவுக்குச் சென்று மீள யாழ்ப்பாணத்திற்கு திரும்பு வோரூடாக மலேரியா ஒட்டுண்ணியின் பரம்பல் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய மலேரியா தடைப்பகுதி பொறுப்பு வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்.பிராந்திய மலேரியா தடைப்பகுதியின் வழிகாட்டலுடன், அவ்வப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யின் ஒத்துழைப்புடன், அண்மைக்காலமாக யாழ்ப்பாண த்தில் மலேரியாவின் தாக்கம்உருவாகாது தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அண்மைக்காலமாக இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோயாளிக [மேலும் வாசிக்க...] தொழில் பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-25 08:57:53| யாழ்ப்பாணம்]இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் நடத்தப்படும் தீவக மாண வர்களுக்கான தொழிற் பயிற்சி,தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு காரைநகர் உதவி அரசாங்க அதிபர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் 16 முதல் 29 வயதிற் குட்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவரை யும் தவறாது கலந்து கொள்ளுமாறு சபை யின் மாவட்ட இணைப்பாளர் இரா.அகிலன் கோரியுள்ளார். [மேலும் வாசிக்க...] பூரான் கடித்து சிறுமி மரணம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-19 10:07:44| யாழ்ப்பாணம்]வெள்ளைப் பூரான் கடித்ததால் 5 வயதுச் சிறுமி ஒரு வர் நேற்று உயிரிழந்துள்ளார். வட மராட்சி கரணவாய் தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த த.பிரவேணி (வயது-5) என்ற சிறுமி யே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு வெள்ளைத்தேளால் தீண்டப்பட்ட இச் சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று நண்பகல் இச் சிறுமி உயிரிழந்துள்ளார். [மேலும் வாசிக்க...] தனிமையிலிருந்த இளம் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு- உடுப்பிட்டியில் கொடூரம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-14 11:36:04| யாழ்ப்பாணம்]உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் தனியாக வசித்துவந்த இளம் பெண் ஒருவர் அடி காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட் டுள்ளன. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் ஜெயகெளரி (வயது 40) என் பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடுப் பிட்டிப் பகுதியில் தனிமையில் வசித்து வந்த யுவதியைக் கொலை செய்து விட்டு அவரிடமிருந்த பல இலட்சம் ரூபாய் நகைகள், வீட்டிலிருந்த பெறுமதி மிக்க உபகர ணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
மேற்ப [மேலும் வாசிக்க...] வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-08 07:28:48| யாழ்ப்பாணம்]வரணி சுட்டிபுர அம்பாள் ஆலய வருடாந்த திருவிழாவின் 11ஆவது உற்சவ இரவு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு அதிகாலை 3.30 மணியளவில்,வீடு திரும்பிய வேளை வரணி கரம்பன் குறிச்சியைச் சேர்ந்த இரத் தினம் கோகிலன் (வயது 19) என்ற இளை ஞன் மீது 15 பேர் கொண்ட குழுவினர் கடுமையாகத்தாக்கியுள்ளனர். இவ் இளைஞனை வாளால் வெட்டி கடுமையாகத் தாக்கிய அவர்கள் சிறிது நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
தலையிலும் கையிலும் பலத்த வாள் வெட்டுக்கு இலக்காகிய இவ் இளைஞனுடன் சென்ற நண்பன் வீட்டாருக்கு தகவல் கொடுத்து இளைஞனை மீட்டு,மந்திகை ஆதார வைத் தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக ,கொடிகா [மேலும் வாசிக்க...] மஹோற்சவம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-06 09:11:45| யாழ்ப்பாணம்]சாவகச்சேரி அமிர்தபாஷினி சமேத சந்திர சேகர வாரிவனநாதர் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
இவ் உற்சவத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சப்பறத் திருவிழாவும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறு நாள் காலை 10 மணிக்கு தீர்த்த் திருவிழாவும் நடைபெறவுள்ளது. [மேலும் வாசிக்க...] பூநகரி-குருநகர் படகுச் சேவை ஆரம்ப நிகழ்வு ஒத்திவைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-03 09:57:44| யாழ்ப்பாணம்]பூநகரிக்கும் குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட விருந்த போதும் அது ஆரம்பிக்கப்படவில் லை.இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப் பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவிருந்தனர்.
இந் நிலையில் நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் நாளில் ஆரம்பித்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரை வழியாக இரண்டரை மணித்தியா லங்கள் மேற்கொள்ளும் பயணத்தை படகுச் சேவையின் மூ [மேலும் வாசிக்க...] ஓராண்டு நினைவு விழா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-05-29 08:56:40| யாழ்ப்பாணம்]கைதடி தெற்கு சனசமூகநிலையத்தினூ டான சமூக முன்னெடுத்தல் குழுவின் ஓராண்டு நிறைவு விழா இன்று பிற்பகல் 2 மணிக்கு சனசமூக கலையரங்கில் நடைபெறும்.
கிருஷ்ணபிள்ளை ஜெயராம் தலைமை யில் நடைபெறும் இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப் பாளர் திருமதி ஆர்.ரகுநாதன், தென்மராட்சி பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகத் தர் திருமதி செல்வராணி ஜெகதீஸன் ஆகி யோர் பிரதம விருந்தினராக கலந்து கொள் கின்றனர். [மேலும் வாசிக்க...] குடும்பஸ்தர் சடலமாக மீட்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-05-29 08:50:18| யாழ்ப்பாணம்]மண்டைதீவில் கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அருளேந்திரன் (வயது 42) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டவ ராவார்.
நேற்றுக்காலை கடற்றொழிலுக்கு சென்ற இவரை காணாது உறவினர்கள் தேடிச் சென்ற போது பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் நேற்றிரவு யாழ். போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. [மேலும் வாசிக்க...] |